கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் வெற்றி நடித்து வெளிவந்த திரைப்படம் 8 தோட்டாக்கள்.
தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் வெற்றியின் அடுத்த த்ரில்லர் திரைப்படமாக மெமரீஸ் தயாராகியுள்ளது.
நடிகர் வெற்றி கதாநாயகனாக நடிக்கும் மெமரிஸ் திரைப்படத்தை ஷிஜுதமீன் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது. இயக்குனர் ஷயாம் பிரவின் இயக்கும் இத்திரைப்படத்திற்கு ARMO & கிரன் நுப்பிட்டால் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் கவாஸ்கர் அபினாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதில் இத்திரைப்படத்தின் ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டதோடு விரைவில் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.