அடிப்படையில் ஸ்டேன்ட் – அப் காமெடியனான நவீன் பாலிஷெட்டி 2012 இல் சினிமாவுக்கு வந்தார் . இருப்பினும் 2019 இல் தான் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார்.

அதையடுத்து 2021 இல் வெளியான நகைச்சுவை படம் ‘ஜதி ரத்னலு’ மிகப்பெரிய வெற்றி பெற்று நவீன் பாலிஷெட்டியை ஸ்டாராக்கியது.

இந்நிலையில் மகேஷ் இயக்கத்தில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படத்தில் நடிக்க உள்ளார் நவீன். யுவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இதில் நாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகியிருப்பதாக கூறப்படுகிறது. அவரும் கால்ஷீட் தர தயாராக இருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.