சென்னை:
மிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொரோனாவின் கோர பிடியில் சிக்கி மெல்ல மெல்ல மீண்டும் வரும் சூழலில் கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு புதிய தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சுற்றுப்புற பூஞ்சை கிருமிகள் ஒருவரது நாசி வழியாக சென்று உடல் உறுப்புகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கருப்பு பூஞ்சையால் நாடு முழுக்க 11,700 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்காக ஆம்போடெரிசின் மருந்து 2,470 குப்பிகள் இதுவரை தமிழகம் வந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.