மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மும்பையில் கனமழை பெய்துள்ளது

சில தினங்களுக்கு முன்பு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த டவ்தே புயலால் மகாராஷ்டிராவில் மே 17 ஆம் தேதி மும்பையில் வழக்கத்துக்கு மாறாக கனமழை ஏற்பட்டது. புயல் கடந்ததில் இருந்து மகாராஷ்டிராவில் வறண்ட வானிலை காணப்பட்டது.
தற்போது தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் இந்த வருடம் தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மும்பையில் நேற்று கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, தாதர், பெட்டர் சாலை உள்ளிட்ட பல மையப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிராவில் சோலாப்பூர், புனே போன்ற நகரங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]