தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்ட முக கவசத்தை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வித்தியாசமான வகையில் முக கவசம் அணிந்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டரில் அவரை பின்தொடரும் ஒருவர் கேட்ட போது, அவை அனைத்துமே தனது வீட்டில் தயாரிக்கப்படுபவை என்று குறிப்பிட்டார்.

மேலும் தனது மனைவி அதை தயாரித்ததாக கூறியுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது செல்லப்பிராணி அதை மாற்றி அமைக்கிறது என்று கிண்டலாகவும் தனது பின்தொடர்பாளருக்கு பதில் அளித்துள்ளார். இந்த ட்வீட் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

[youtube-feed feed=1]