பாந்த்ரா பகுதியில் டைகர் ஷ்ராஃப் வசித்து வருகிறார். இவரும், நடிகை திஷா படானியும் காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்டுகிறது.

இருவரும் அத்தியாவசியத் தேவை இன்றி அந்தப் பகுதியைச் சுற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. 188 பிரிவின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மும்பை காவல்துறை தரப்பு, ‘வார்’, ‘மலங்’, ‘ஹீரோபந்தி’ என இவர்கள் நடித்த படங்களின் தலைப்புகளைப் பயன்படுத்தி தங்களது ட்விட்டர் பக்கத்தில் சூசகமாகப் பதிவிட்டுள்ளது.

[youtube-feed feed=1]