முன்னணி இயக்குநர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள். ஜூன் 2 பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டர் பக்கத்தில் இணைவதாக மணிரத்னம் புகைப்படம் போட்டு, ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது.

இதனைப் பலரும் உண்மை என நம்பி பின்தொடரத் தொடங்கினார்கள். ஆனால், அது போலியான ட்விட்டர் கணக்கு என்பது உறுதியாகியுள்ளது.

இந்தக் கணக்கு தொடர்பாக சுஹாசினி மணிரத்னம் தனது ட்விட்டர் பதிவில் :

இயக்குநர் மணிரத்னம் இன்று ட்விட்டரில் பக்கம் தொடங்கியிருப்பதாக ஒருவர், @Dir_ maniratnam என்கிற பக்கத்திலிருந்து ட்வீட் செய்துள்ளார். இது பொய், இவர் ஒரு போலி நபர். என தெரிவித்துள்ளார்.