கமலின் கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள் போன்ற சூப்பர்ஹிட் திரைப்படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் இன்று காலை மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90.
இந்நிலையில் இன்று காலை 8.45 மணியளவில் வயது மூப்பு காரணமாக ஜி.என்.ரங்கராஜன் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் ‘நினைத்தாலே இனிக்கும்’ (2009), ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஜி.ஆர்.குமரவேலனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.