சேலம்: தமிழகஅரசு  கொரோனா உயிரிழப்பை குறைத்து காட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான  அரசு மீது, எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமி, சேலம்  அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து  ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மருத்துவர்களிடம் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்ப்டும் சிகிச்சை குறித்தும், படுக்கை வசதி குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன.   மாவட்டம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. ஆனால், தமிழகஅரசு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என கூறி வருகிறது. சேலத்தில், நோயாளிகளின் வசதிக்க கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை தம்ழிஅக அரசு ஏற்படுத்த வேண்டும்.

சேலம் உருக்காலையில் 500 ஆக்சிஜசுன் படுக்கை வசதிகளை கடந்த வாரம்  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அவை இன்னும் முழுமையாக செயல்பாட்டிங்றகு வரவில்லை என்று கூறியதுடன், கொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதை திமுக அரசு மறைத்து வருகிறது,  அரசு வெளியிடும் தகவலில் குறைத்து காட்டப்படுகிறது.  இறப்பு விவரத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.,