டெல்லி: இன்று 43வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில்  கொரோனா மருந்துகள் விலை குறைக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 43வது கூட்டம் இன்று நடைபெற உள்ளது.  கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறாமல் இருந்து வருகிறது.   கடந்த 42வது கூட்டம் 2020ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. அதையடுத்து, இன்று 43வது கவுன்சில் கூட்டம் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நடக்கிறது.
இன்றைய கூட்டத்தில், கொரானாவுக்கான மருந்து, தடுப்பூசி, முழு கவச உடை, தடுப்பூசி, ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட கோவிட் நிவாரணப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிச் சலுகை உள்பட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்தபோது, அதனால் ஏற்படும் வரி இழப்பு, ஐந்தாண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, மாநிலங்களுக்கு தரப்பட வேண்டிய 2.69 லட்சம் கோடி ரூபாய் குறித்தும் விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.