
1981-ல் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் 1990-ல் ஒரு புதிய கதை படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமாகி கொடி கட்டி பறந்தார் நடிகை மீனா .
அனைத்து பெரிய ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்த மீனா திருமணத்துக்கு பிறகு குணசித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
மீனா சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவர் நடித்த முக்கிய படங்களின் காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பை வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CPTLCKRB5h7/
Patrikai.com official YouTube Channel