சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் புகழ்பெற்ற பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக பாலியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை குட்டிபத்மினி. அதில் நுங்கம்பாக்கம் வசந்தி குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பத்ம சேஷாத்திரி ஸ்கூலில் சீட் வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தேன்… அப்போது ஒய்ஜிபி கூப்பிட்டதால், அவங்க ரூமுக்கு போனேன்.. ஏம்மா… நீ எல்லாம் கியூவில் நிக்கலாமா? இந்த ஸ்கூலுக்கு முதன்முதலில் பெரியவங்க எல்லாம் அடிக்கல் நாட்டும் போது, நீ அந்த டைம்ல வந்திருக்கிற, உன் கையால அடிக்கல் நாட்டியிருக்கிற… எனக்கு அது நல்லா ஞாபகம் இருக்கு..”ன்னு சொன்னார்.

என் மகளுக்கு சீட் கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். மகளுக்கு அட்மிஷன் எல்லாம் ஆயிருச்சி. ஒரு மாசத்துக்கு அப்புறம் மேடம் கூப்பிடறாங்கன்னு சொன்னாங்க. ஏதோ என் மகள் தான் சேட்டை செய்திருப்பாள் என்று நினைச்சிக்கிட்டே ஸ்கூலுக்கு போனேன்.

ஆனால் அங்கே வருமானவரித்துறைக்கு சீரியல் பண்ணிக்கிட்டு இருக்கியே , எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தரமாட்டேங்கிறார். கொடைக்கானலில் ஒரு சொத்து வாங்கியிருக்கிறோம்… ஸ்கூல் அக்கவுண்ட்ல வாங்கியிருக்க வேண்டுமாம். ஆனால் வேறு ஒரு அக்கவுண்ட்ல வாங்கிட்டாங்களாம். சட்டப்படி அது தப்பு போல இருக்கும்… அதனால வருமான வரித்துறை பெரிய அளவில் வரி போட்டுட்டாங்க எப்படியாவது அதை கரெக்ட் பண்ணி கொடுக்கணும்னு கேட்டாங்க.

அப்ப தான் எனக்கு புரிந்தது. இவங்க இதுக்காக தான் எனக்கு சீட் கொடுத்திருக்காங்க. உண்மையிலே என் மேல இருந்த அன்புனால கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன்” என்று குட்டி பத்மினி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.