2

 நேற்று குடும்பத்துடன் கும்பகோணம் மாமாங்கத்திற்கு சென்று வந்ததில் ஒரு அனுபவம். சற்று தர்ம சங்கடமானது.
நிர்வாகம் செய்தவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை தவற விட்டுள்ளார்கள். மனதிற்கு கஷ்டமாக இருக்கு.
தாய்மார்கள், பெண்கள், பலர் ஸ்நானம் செய்து முடித்த பிறகு படி ஏறியதும் தங்களது உடைகளை மாற்றிகொள்ள இடம் இல்லாமல் தவித்த தவிப்பு என் மனதை என்னமோ செய்தது. எந்த மறைவிடமும் கண்ணில் தென்ப்படவில்லை. ஒருவேளை எங்கேயாவது ஒன்றிரண்டு பேருக்கு அமைத்திருக்கலாம். அதுவும் சந்தேகமே.
இதில் சற்று கவணம் செலுத்திருக்கலாம். இது ஏன் இவர்களுக்கு தோன்றவில்லை என புதிராக உள்ளது.
இந்த சமயத்தில் ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடைபெற்ற புஷ்கரத்திற்கு சென்றிருந்தேன். அங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் திரண்டனர் ஸ்நானம் செய்வதற்கு.
ஆனால் அங்கு கண்ட காட்சி என்ன தெரியுமா? மற்ற பல ஏற்பாடுகளுடன் கரையில் ஆங்காங்கு நிறைய உடை மாற்றிக்கொள்ள மறைவிடங்களையும் அமைத்திருந்தனர்.
இபோதும் ஒன்றும் குடி முழுகி போகவில்லை. இன்னூம் 9 நாட்கள் உள்ளது. உடனே நாலாபக்கமும் படித்துறைகளில் ஆங்காங்கு சிறிய சிறிய தற்காலிக மறைவிடங்களை அமைக்கலாமே, செய்வார்களா?