சிவ தாண்டவ வகைகள்
சிவ தாண்டவங்களை எண்ணிக்கையில் அடக்க இயலாது.
ஆனந்த தாண்டவம் – 
சிவன் நடனமாடும் தளங்களில் முதன்மையானது தில்லை என்றிழைக்கப்படும் சிதம்பரம். இந்த தளத்தில் சிவன் பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்றோர்களுக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இந்த தாண்டவம் பிரபஞ்ச இயக்க நடனம் என்று போற்றப்படுகிறது.
அனைத்து நடத்திற்கும் உள்ள ஏக தத்துவத்தை விளக்கும் வடிவமாக நடராஜர் நடனம் விளங்குகிறது. மிகையில்லாத உண்மையை வெளிப்படுத்தும் இந்த நடத்தை, பரதக் கலையின் சின்னமாக மக்கள் போற்றுகின்றனர். இது ஆனந்த தாண்டவம் எனவும் வழங்கப்படுகிறது.
இந்த ஆனந்த தாண்டவத்தைக் குற்றாலத்திலும், சிதம்பரத்திலும் காணலாம்.
காளிகா தாண்டவம் 
பிரம்மாவுக்குப் படைத்தல், விஷ்ணுவுக்குக் காத்தல், சிவனுக்கு அழித்தல் என பொதுவாகச் சொன்னாலும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களை ஈசன் செய்கிறார். இதைக் குறித்து ஆடும் நடனம் காளிகா தாண்டவம் எனப்படுகிறது.
இந்தக் காளிகா தாண்டவத்தைத் திருநெல்வேலியில் காணலாம்.
 சந்தியா தாண்டவம் 
பாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தைக் குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்டவம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைத்தான் பிரதோசம் என்று சைவர்கள் கொண்டாடுகின்றார்கள்.
மற்ற தாண்டவங்களைப் போல இடதுகாலை தூக்கி ஆடாமல் சிவன், வலது காலை தூக்கி ஆடுவது மேலும் சிறப்பு.
இந்த சந்தியா தாண்டவத்தை மதுரையில் காணலாம்.
ஊர்த்துவ தாண்டவம் 
சிவனுக்கும், சக்திக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் ஒரு காலை தலைக்கு மேல் தூக்கி நடமாடினார் சிவன். அதைப் போலச் சக்தியால் நடனமாட இயலவில்லை. இந்த தாண்டவத்தை ஊர்த்துவ தாண்டவம் என்கின்றனர்.
இந்த ஊர்த்துவ தாண்டவத்தை திருவாலங்காட்டில் காணலாம்.
 கஜ சம்ஹாத் தாண்டவம் 
தருக்கானவனது முனிவர்கள் ஆணவத்தினால் இறையருளைப் பெறாமல் இருந்தார்கள். அவர்களின் ஆணவத்தினை யானையாக மாற்றி சிவன் வெற்றி கொண்டார். ஆணவம் அழிந்த முனிவர்கள் சிவ பெருமானை வணங்கி முக்தி பெற்றனர். இந்த தாண்டவத்தில் சிவன் யானையின் மீது ஆடுவார்.
இந்த கஜ சம்ஹாத் தாண்டவத்தை நன்னிலம் அருகேயுள்ள திருச்செங்காட்டாக்குடியில் காணலாம்