சென்னை:
த்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் உடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் முறையாக நடைபெறவில்லை. அண்ணா பல்கலையில், நவம்பர், டிசம்பரில் நடைபெற்ற தேர்வில் 25 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சுமார் 4.25 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1.10 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும். 2021 பிப்ரவரியில் நடந்த தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்தது தொடர்ந்து மறுதேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம். என்றார்.