மும்பை: ஐபிஎல் வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை, செப்டம்பரில் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நடப்பு ஐபிஎல் தொடர், நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 20க்கும் மேற்பட்ட ஐபிஎல் வீரர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொற்று அதிகரிப்பு காரணமாக பல வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி சொந்த நாடுகளுக்கு சென்றனர்.
இதையடுத்து ந ஐபிஎல் தொடர் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் சமூக ஆர்வலர்கள் பலரும் ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் வலியுறுத்தியுதுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்., இதைத்தொடர்ந்து, வேறு வழியில்லாமல் , நடப்பு ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்து. அதைத்தொடர்ந்து அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் உறுப்பினர்களையும், பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்புவதில் கவனம் செலுத்தி வருகிறது.
இதைத்தொடர்ந்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நியூசிலாந்திற்கு எதிரான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கும், ஜூன் முதல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாத மத்தியில் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடர் முடிகிறது . அதன்பின் வேறு ஏதும் போட்டிகள் இல்லாததால், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், “இப்போது நாம் ஐபிஎல் போட்டிகள் நடத்த சர்வதேச அணிகளின் அட்டவணையின்படி, தேதிகள் கிடைக்குமா என ஆராய வேண்டும். தேதிகள் கிடைக்கும் பட்சத்தில் , அதைப் பற்றி ஆராய்ந்து முடிவு எடுப்போம். செப்டம்பரில் இது சாத்தியமா என்று நாம் பார்க்க வேண்டும். ஐ.சி.சி மற்றும் பிற வாரியங்களின் அட்டவணைகளை ஆராய்ந்து அந்தந்த வாரியங்கள் உடன் கலந்து முடிவு எடுக்கப்படும்” எனக்கூறினார்.