சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பள்ளி சார்ந்த மனுக்களுக்கு தீர்வு காண அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
“முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தில் ‘ கூறியபடி, உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக , ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, பிரசாரத்தின்போது, பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் தன்மைக்கேற்றவாறு தகுதியான மனுக்கள் ஒவ்வொன்றின் மீதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த மனுக்களில், பள்ளிக்கல்வி சார்ந்த மனுக்களுக்கு தீர்வு காண ஒருங்கிணைப்பு அலுவலர் ராமசுந்தரம் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வி துறை ஆணையாளர் அறிவித்து உள்ளார்.