சென்னை
இந்த வருடம் சென்னையில் கடந்த 15 வருடங்களாக இல்லாத அளவுக்குக் குளிர்ந்த கோடை நிலவியது.
சென்னையைப் பொறுத்தவரை மே மாதம் என்பது கடுமையான கோடைக்காலம் ஆகும். இம்மாதத்தில் சென்னையின் சராசரி வெப்பம் 37டிகிரியாக இருக்கும். மதியம் 1.30 மணிக்கு வெப்பம் உச்சத்தைத் தொட்டு அதன் பிறகு கடற்காற்று வீசி வெப்பத்தைக் குறைக்கும். சென்னையின் புறநகர் பகுதிகளில் கடற்காற்று வர நேரம் ஆகும் என்பதால் மாலை 2.30 முதல் 3.30 மணி வரை வெப்பம் உச்சத்தில் இருக்கும்.
சென்னையைப் பொறுத்தவரை 40 அல்லது 41 டிகிரி என்பது இரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. அதாவது புயல் வங்கம், ஒரிசா அல்லது பர்மாவைக் கடுக்கும் போது வடமேற்கு பகுதியில் இருந்து வரண்ட காற்று வீசும் போது நிகழும். இரண்டாவதாக மழை மேகங்கள் கடலுக்கு மேல் திரண்டு நிற்கும் நிலையில் கடற்காற்று நிலத்துக்கு வர முடியாத நிலை ஏற்பட்டு அதனால் வெப்பம் அதிகரிக்கும். அப்போது மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை கூட வெப்பம் உச்சத்தைத் தொடும்.
சென்னையில் பர்மாவை நோக்கி புயல் செல்லும்போது ஐந்து வருடங்களில் மிக கடுமையான கோடை நிகழ்ந்துள்ளது. குறிப்பாக 2003 ஆம் வருடம் மற்றும் 1998 ஆம் வருடம் சென்னையில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் கோடை கடுமையாக இருந்தது.
அவை பின் வருமாறு
45.0 C on 31.05.2003 – Cyclone to Burma
44.1 C on 30.05.1998
43.6 C on 23.05.1980
43.4 C on 12.05.2002
43.2 C on 04.05.1976
இந்த 2021 ஆம் வருடம் மே மாதத்தைப் பொறுத்தவரை வெப்பம் ஒரு நாள் கூட 37 டிகிரியை தாண்டவில்லை. ஒரிசாவை நோக்கி புயல் சென்ற 26 ஆம் தேதி அன்று கூட வெப்பம் 37 டிகிரியாகத்தான் இருந்தது. ஆயினும் விரைவில் மீண்டும் வெப்பம் குறைந்து இந்த வருடக் கோடையை மக்களால் ரசிக்க முடிந்தது.
இந்த வருடம் சென்னை நகரில் மே மாத சராசரி வெப்பம் 35.94 டிகிரியாக இருந்தது. மொத்தமுள்ள 31 நாட்களில் 22 நாட்கள் வெப்பநிலை 36 டிகிரிக்கு குறைவாகவே இருந்தது. இந்த வருடம் ஒரே தினம் மட்டுமே அதாவது புயல் கடந்த அந்த ஒரே நாள் மட்டும் 37 டிகிரி வெப்பம் கிஆணப்பட்டது. கடந்த 2020 ஆம் வருடம் புயல் கடந்த போது தொடர்ந்து 3 நாட்கள் 40 டிகிரி வெப்பம் இருந்தது.
சென்னையில் இந்த மாதத்தில் சராசரியாக 40 மீமீ மழை பெய்துள்ளது. இது 6 வருடங்களுக்குப் பிறகு புயலால் ஏற்பட்ட மழையாகும்,. சென்னையில் இந்த அளவு மழை 1990, 1995, 2004, 2010, மே 2016 ஆம் வருடம் மே மாதம் இவ்வளவு மழை பெய்துள்ளது. மே மாதம் 21 மற்றும் 22 என மே மாதத்தில் இரு தினங்கள் மழை பெய்துள்ளது.
நன்றி : பிரதிப்ஜான் – தமிழ்நாடு வெதர்மேன்