சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல சுழற்சி காரணமாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.