iph5s_case_uta-satin_silver01
வாஷிங்டன்:
1.1.1970 என தேதியை மாற்றி அமைத்தால் ஆப்பிள் நிறுவன ஐ போன்கள் செயலிழப்பதாக புகார் எழுந்துள்ளது.
2000ம் ஆண்டு பிறப்பதற்கு முன் ஓய்2கே பிரச்னை கணினி உலகில் பெரும் பிரச்னையாக இருந்தது. தேதி குறிப்பிடும் இடத்தில் இரண்டு பூஜ்யம் மட்டுமே 2000ம் ஆண்டில் வரும் என்பதால் சர்வதேச அளவில் இப்பிரச்னையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ஆயிரகணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
தற்போது ஐ போன்கள், ஐ பேட் என பல கணினி பல அவதாரங்களை எடுத்துள்ளது. 15 ஆண்டுகள் கழித்து தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் ஐ போன்களில் குறிப்பிட்ட ஒரு தேதியை மாற்றி அமைத்தால் அந்த செல்போன்கள் செயலிழப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஐ போன்கள் என்பது நித்தம் நித்தம் ஆராய்ந்து, அதில் உள்ள புதிய வசதிகளை கண்டுபிடிப்பது பலருக்கு அலாதி பிரியம். இந்த வகையில் தற்போதைய தேதியை மேனுவலாக 1.1.1970 என ஒரு சிலர் மாற்றி நிர்ணயம் செய்தனர். அவ்வளவு தான் சிறிது நேரத்தில் அந்த ஆப்பிள் ஐ போன்கள் செயலிழந்து விடுகிறது. இது போன்ற புகார்கள் பல ஆப்பிள் நிறுவனர் சர்வீஸ் சென்டர்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தில் 64 பிட் பிராசஸர்களில் ஐ ஆபரேட்டிங் சிஸ்டம் 8 அல்லது 9 பயன்படுத்தப்படும் ஐ போன்கள், ஐ பேட்ஸ், ஐ போட். 5எஸ் ஐ போன், ஐ பேட் ஏர், ஐ பேட் மினி 2, 2015ன் 6வது தலைமுறை ஐ போட மற்றும புதிய மாடல்களில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
ஆப்பிள் ஐ போன்களில் தேதி மற்றும் நேரத்தை இவ்வாறு மாற்றி அமைக்க நீண்ட நேரமாகும். அதனால் பெரும்பாலானவர்கள் இதை செய்யமாட்டார்கள். எனினும் எதிர்பாராத வகையில் சிலர் செய்துவிட்டு, இவ்வாறு சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர்.
இந்த தகவலை படித்துவிட்டு முயற்சித்தால் நீங்களும் சிக்கலில் சிக்கி கொள்வது நிச்சயம்… அதனால் முயற்சிக்க வேண்டாம்.