* நாடே மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நேரத்திலும், பொறுப்புகளை, அதிகாரமற்ற மாநில அரசுகளின் மீது விட்டுவிட்டு விலகிக்கொள்வது.
* இந்தநேரத்திலும், மேற்குவங்கத்தின் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தலை, ஒரேசமயத்தில் நடத்தாமல், தங்களின் பழைய சர்ச்சைக்குரிய முடிவில் உறுதியாக இருப்பது.
* பிஎம் கேர்ஸ் நிதி குறித்து வாயே திறக்காமல் இருப்பது மற்றும் அதிலிருந்து ஒரு சிறுதொகையைக்கூட மக்களுக்கு பயன்படுத்தாமல் இருப்பது.
* கொடுமையான ஒரு நேரத்தில், மருந்து விலையை தன்னிச்சையாக நிர்ணயிக்க, தனியார் மருந்து நிறுவனங்களை அனுமதிப்பது.
* கொரோனாவை சமாளிக்கத் திணறும் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை, தருவது பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் இருப்பது.
* அனைத்தையும் தன் கையில் வைத்துள்ளபோது, கொரோனா தொடர்பான சூழலை கையாள, தொடர்ந்து மக்களுக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டிருப்பது.
* ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு, இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலிருப்பது.
* மருந்துகள் தயாரிக்கவல்ல அரசின் நிறுவனங்களை, செயல்பாடின்றி அப்படியே வைத்திருப்பது.
* பாதிக்கப்படும் மக்களுக்கான எந்த நிவாணரமும் அறிவிக்காமல் இருப்பது.
* மக்கள் கொத்து கொத்தாக மடியும் நேரத்திலும், தமது அரசியல் நடவடிக்கைகளை கைவிடாமல் இருப்பது.
* இந்த நேரத்திலும்கூட, ஸ்டெர்லைட் போன்ற நாசகார ஆலையை திறக்க முயற்சிப்பது.
* பிணங்கள் விழும் சூழலிலும், அதிகார குவிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்துவது.
இப்படி எத்தனை எத்தனையோ…
இதுதான் பாஜக!
இதுதான் நரேந்திர மோடியின் ஆட்சி!
இதுதான் குஜராத் மாடல்!
இதுதான் நமது வெகுஜன ஊடகங்களின் யோக்கியதை!