நியூயார்க்: இந்தியா, சீனா உள்பட, உலகின் 13 இடங்களில் மேற்கொள்ளப்படும் தனது சர்வதேச நுகர்வோர் வங்கியியல் சந்தை நடவடிக்கைகளை நிறுத்துவதாக சிட்டி குழுமம் அறிவித்துள்ளது.
அதாவது, அந்தக் குழுமம், தனது கவனத்தை, சில்லறை வங்கி வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து, சொத்து மேலாண்மையில் திசைதிருப்பவுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனிவரும் நாட்களில், சிட்டி குழுமம், தனது நுகர்வோர் வங்கியியல் சந்தை நடவடிக்கைகளை, சிங்கப்பூர், ஹாங்காங், லண்டன் மற்றும் அமீரகம் ஆகிய நாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தி மேற்கொள்ளவுள்ளது.
மற்றபடி, இந்தியா, சீனா உள்ளிட்ட, தனக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ள மொத்தம் 13 நாடுகளிலிருந்து, நுகர்வோர் வங்கியியல் சந்தை நடவடிக்கைகளை அக்குழுமம் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.