இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ‘பிளிப் கார்ட்’ இணையதள டிராவல் டெக்னாலஜி நிறுவனமான ‘க்ளியர் ட்ரிப்’ பின் 100 சதவீத பங்குகளை வாங்கியிருக்கிறது.
இந்த தகவலை அவ்விரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
‘க்ளியர் ட்ரிப்’ தற்போதுள்ள தனது ஊழியர்களை கொண்டு அதே பெயரில் இயங்கும் என்றும் வாடிக்கையாளர்களின் பயண தேவைகளுக்கான எளிமையான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்காக ‘க்ளியர் ட்ரிப்’ நிறுவனம் ‘பிளிப் கார்ட்’ நிறுவனத்திடமிருந்து எவ்வளவு தொகை வாங்கியது என்பது குறித்து தகவலும் தெரிவிக்கப்படவில்லை