சென்னை
நேற்று சென்னையில் மண்டல வாரியாக பெய்த மழையின் அளவு இதோ

கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் கோடையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ததாகத் தகவல்கள் தெரிவித்த போதிலும் சென்னை நகர மக்கள் கடும் கோடையில் வாடினர். இந்நிலையில் நேற்று சென்னையில் மழை பெய்தது.
நேற்றைய மழையினால் சற்றே நிம்மதி அடைந்த சென்னை மக்களுக்கு மேலும் மகிழ்வூட்டும் வகையில் இன்று காலையும் மழை தொடர்கிறது. நேற்று சென்னை நகரில் மண்டல வாரியாக பெய்துள்ள மழையின் அளவு இதோ :
பகுதி மழை (மிமீ)
ஆலந்தூர் 25
மீனம்பாக்கம் 24
மாதவரம் 22
எண்ணூர் 19
கோடம்பாக்கம் 16
வளசரவாக்கம் 16
நுங்கம்பாக்கம் 14
மணலி 10
[youtube-feed feed=1]