புதுடெல்லி:
டெல்லியில் புதிதாக 17,282 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் 9,952 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,05,162 பேர் குணமடைந்துள்ளனர்.

104 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,540 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தில்லியில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 50,736 ஆகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 15.92 சதவிகிதமாக உள்ளது.