கொல்கத்தா:
மேற்கு வங்கத்தை பிளவுபடுத்தி அழிக்கவே பாஜக விரும்புகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
மேற்கு வங்கம் வடக்கு தினஜ்பூரில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்; மேற்கு வங்கத்தை பிளவுபடுத்தி அழிக்கவே பாஜக விரும்புகிறது. தமிழகம் மற்றும் அசாம் மாநிலங்களில் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. பாஜகவுடன் காங்கிரசுக்கு எப்போதும் உறவு இல்லை; ஆனால் முன்பு அக்கட்சியுடன் மம்தா கூட்டணி வைத்திருந்தார். தங்க வங்கத்தை கட்டமைப்போம் என்று கூறும் பாஜக தற்போது நாட்டையே அழித்து வருகிறது எனவும் கூறினார்.