ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
பின்னர் தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. இந் நிலையில் நடப்பு கல்வியாண்டு சரிவர நடைபெறாத காரணத்தால் 8, 9 மற்றும் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக ராஜஸ்தான் மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
தற்போது கொரோனா தொற்று பரவலின் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடைபெறுவதாக இருந்த பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.