சென்னை: தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களின் மீது தமிழகம் முழுவதும் 6,465 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 25,90,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் சுகாதார தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந் நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக 4 நாட்களில் மட்டும் ரூ.2.78 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் மட்டும் ரூ. 2,52,34,900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காவல்துறை மண்டலத்தில் மட்டும் ரூ.85.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 8ம் தேதியிலிருந்து 11ம் தேதிவரை தமிழகம் முழுவதும் 1,30,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களின் மீது தமிழகம் முழுவதும் 6,465 வழக்குகள் பதிவாகி உள்ளன. கிட்டத்தட்ட 25,90,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.