கோவை
ஊரடங்கு என்னும் பெயரில் கோவை உணவகத்தில் சாப்பிடுவோரை ஒரு துணை ஆய்வாளர் அடித்து விரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவையில் கொரோனா பரவுவதால் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி உணவகங்கள் அனைத்தும் இரவு 11 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை அனைத்து உணவகங்களும் பின்பற்றி வருகின்றன.
இந்நிலையில் கோவை நகரில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் இரவு 10.20 மணிக்கு நுழைந்த ஒரு காவல்துறை அதிகாரி அங்கிருந்தோரை அடித்து விரட்டி அடிக்கும் காட்சி வீடியோ பதிவாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் அங்கு உணவு அருந்துவோரில் சிலரைக் குச்சியால் அடித்து வெளியேற்றுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. பல நெட்டிசன்கள் இது குறித்து, “இந்த அளவு தீவிரத்தை எந்த காவலரும் விதிகளை மீறி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது காட்டி உள்ளனரா?” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.
[youtube https://www.youtube.com/watch?v=zZJhRhu3o80]