திருமலை:
திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் இன்றுடன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட திருப்பதி கோயிலில் தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் 6000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தற்போது 50,000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே வழங்கப்படும் எனவும், அதற்கு மேல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பக்தர்களின் நலன் கருதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே வழங்கப்படும் எனவும், அதற்கு மேல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.