சென்னை:
திகரிக்கும் கொரோனாவில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டுமா? இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடியுங்கள்.

  1. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்
  2. முகக்கவசத்தை எப்போதும் நேர்த்தியாக அணிந்திருங்கள்
  3. தும்மல், இருமல் ஏற்படும்போது கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துங்கள்
  4. பொது இடங்களில் குறைந்தது 2 மீட்டர் அளவில் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுங்கள்
  5. வெளியே சென்று வந்த பின்பும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை சோப்பினால் 20 வினாடிகளுக்கு நன்றாக தேய்த்துக் கழுவுங்கள்.
  6. கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதுடன், நெரிசலுக்கு காரணமாகவும் இருக்காதீர்
  7. அவசியம் இருந்தால் மட்டுமே பொது இடங்களுக்குச் செல்லுங்கள்
  8. அலுவலகத்தில் இருந்தாலும் தற்காப்பு வழிகளை தவறாமல் பின்பற்றுங்கள்
  9. அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள்
  10. உரிய நேரத்தில், சரியான வழிகாட்டுதல்களுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்