புவனேஸ்வர்: ஒடிசாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2,000 முதல் 5,000 வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகின்றது. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
தொற்றுகள் அதிகரிப்பால் அனைத்து மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந் நிலையில் ஒடிசாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2,000 முதல் 5,000 வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது குறித்து ஒடிசா அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் முறை ரூ. 2,000 அபராதமும், 3ம் முறை முதல் ரூ. 5,000 அபராதமும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.