கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் விதிமீறல் தொடர்பாக அம்மாநில முதல்வர்  மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் 2 வது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்னு 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.  அங்கு தேர்தலையொட்டி, பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளும் தேர்தல் விதிகளை  மீறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் விதிகள் மீறி, முஸ்லிம்கள் பாஜகவுக்கு எதிராக இணைய வேண்டும் என்று ஒருதலைப்பபட்சமாக ஒரு இனத்துக்கு சாதகமாக  பேசியதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  அதில்,  மார்ச் 28ந்தேதி மற்றும் ஏப்ரல் 7 ந்தேதிகளில் மம்தா பேசிய கருத்துக்கள் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளது. அதுகுறித்து நாளை  காலை 11 மணிக்குள் பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.