பிரபல ஓடிடி தளமான ஜீ5-ல் கடந்தாண்டு லாக்கப், கபெ.ரணசிங்கம், முகிலன், ஒரு பக்க கதை ஆகிய படங்கள் வெளியானது.

தற்போது மதில் என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் இயக்குனரும், நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து படத்தில் மைம் கோபி, பிக்பாஸ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 14 அன்று மதில் திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மதில் படத்தின் ட்ரைலர் காட்சி தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

[youtube-feed feed=1]