டெல்லி: பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கியானது வீட்டுக்கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை உயர்த்தி உள்ளது. இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளதாவது: கடந்த மாதம் வரை வீட்டுக் கடனுக்காக இருந்த குறைந்தபட்ச வட்டி விகிதம் 6.80% இருந்த நிலையில், கடந்த மாதம் 1ம் தேதி 6.70 % குறைத்து சலுகையாக அறிவித்தது. கடந்த 1ம் தேதியிலிந்து ஸ்டேட் பாங்க் வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 6.70ல் இருந்து 6.95 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் வீட்டுக்கடனுக்கான பிராசசிங் கட்டணம் குறைந்தது ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளதால், மற்ற வங்கிகளும் வட்டியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.