அமெரிக்கா:
பல தசாப்தங்களுக்கு பின் அழிவின் விளிம்பில் இருந்த நீல திமிங்கலங்கள் அழிவின் விளிம்பிலிருந்து படிபடியாக மீளும் நிலைக்கும் திரும்பி வருகின்றன.
உலகலவில் அரிய வகையான விலங்குகளின் எண்ணிக்கை விரைவாகக் குறைந்து வருவது குறித்து தொடர்ந்து செய்தித் தகவல்கள் உள்ளன, இந்நிலையில், நீல திமிங்கலங்களைப் பற்றிய வெளியான செய்தி ஒன்று விலங்கு ஆர்வர்லர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஜார்ஜியாவில், பிரிட்டிஷ் அண்டார்டிக் கணக்கெடுப்பு (பிஏஎஸ்) நடத்தியது. இதில், திமிங்கலங்களின் எண்ணிக்கையை சமீபத்திய ஆண்டுகளில் 97% குறைத்தாக கண்டறியப்பட்டுள்ளது
உணவுக்காக, நீல திமிங்கலங்கள் பல ஆண்டுகளாக வேட்டையாடப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. இது போன்ற வேட்டையாடப்படுவதால், கடந்த 60 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் நீல திமிங்கிலங்கள் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 1986-ஆம் ஆண்டில், வர்த்தக ரீதியாக திமிங்கலங்கள் விற்பனையை சர்வதேச திமிங்கல ஆணையம் (ஐ.டபிள்யூ.சி) தடை செய்தது. இது நீல திமிலங்களின் எண்ணிக்கை அதிகரிக்க மிகவும் உதவியது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட BAS கணக்கெடுப்பின் போது, ஒரே ஒரு நீல திமிங்கலம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டின் கணக்கெடுப்பில், 36 வெவ்வேறு வகைகளில் திமிங்கலங்களையும் கணக்கெடுக்கப்பட்டது. அதில், மொத்தமாக, 55 நீல திமிங்கிலங்கள் இருப்பதாகவும் தெரிவிக்க்கப்பட்டது. நீல திமிங்கலங்கள் 98 அடி நீளம் வரை வளரும். எனவே அவை கண்டுபிடிக்க மிகவும் கடினமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக வணிக ரீதியான திமிங்கலத் தடை நடைமுறையில் இருந்தபோதிலும், நார்வே, ஜப்பான் மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகள் இந்த தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்து வருகின்றனர். விஞ்ஞான நோக்கங்களுக்காகவே நீல திமிங்கலங்களை பிடிப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, ஐஸ்லாந்து நீல திமிங்கலங்கள் விற்பனையை 2006-ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கியது. கடந்த 1980-ஆண்டுகளில் தடை நடைமுறைக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து திமிங்கலங்களை நடத்திய நாடுகளால் 31,000-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கொல்லப்பட்டதாக டபிள்யூ. டபிள்யூ. எப் தெரிவித்துள்ளது.
விஞ்ஞான அனுமதி இருந்தபோதிலும், ஜூன் 2019 இல் ஜப்பான் அதிகாரப்பூர்வமாக வணிக திமிங்கலத்தை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது. பிபிசியின் கூற்றுப்படி, ஜப்பானின் திமிங்கலக் கப்பல்களுக்கு கடந்த ஆண்டு ஜப்பானிய கடலில் 227 மின்கே, பிரைட் மற்றும் சீ திமிங்கலங்களை பிடிக்க அனுமதி இருந்தது. வணிக திமிங்கலத்தை மீண்டும் தொடங்கியவுடன், ஜப்பான் தன்னை IWC இலிருந்து விலக்கி கொண்டது.
நீல திமிங்கலம் போன்ற இனங்கள் ஆபத்தானவை என வகைப்படுத்தப் பட்டிருந்தாலும், ஜப்பான் நீண்ட காலமாக திமிங்கலங்களை வேட்டையாடுவதை நிறுத்த மாட்டோம் என்று தொடர்ந்து சொல்லி கொண்டே இருந்தது. சில நாடுகளின் ஆட்சேபனை செய்த போதிலும், WWF மற்றும் IWC போன்றவை, திமிங்கலத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.