
ஆண்டிகுவா: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், விண்டீஸ் அணி 300 ரன்களைத் தாண்டியுள்ளது.
நேற்று 200 ரன்களைத் தொடுவதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. ஆனால், துவக்க வீரர் பிராத்வெய்ட் மற்றும் கார்ன்வால் இருவரும் இணைந்து ஆட்டத்தை மாற்றிவிட்டனர்.
பிராத்வெய்ட் தற்போது சதம்(102) அடித்து ஆடிக்கொண்டுள்ளார். கார்ன்வால் 60 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார். முன்னதாக மேயர்ஸ் 49 ரன்கள் அடித்து அவுட்டானார். ஜோசப் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
தற்போதைய நிலையில், அந்த அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்களை சேர்த்துள்ளது. தற்போது 2ம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடைபெற்று வருகிறது. இலங்கை தரப்பில், லக்மால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel