
ரஜினியின் ’காலா’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் ‘சர்பட்டா பரம்பரை’. ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1980-களில் நடக்கும் கதையான சர்பட்டா படம், குத்துச் சண்டையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்பட்டா படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ரஞ்சித். அதன்படி ஆர்யா இடம் பெற்றிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆர்யாவின் இந்த லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
https://twitter.com/beemji/status/1375786938515345410
Patrikai.com official YouTube Channel