கெய்ரோ: எகிப்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் பலியாகினர்.

எகிப்தின் தெற்கே டாஹத்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். 66 பேர் காயமடைந்தனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை அங்குள்ள கிராமவாசிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே பராமரிப்பில் அரசு நிர்வாகம் போதிய கவனம் செலுத்தாததால் எகிப்தில் அடிக்கடி ரயில் விபத்துக்கள் ஏற்படுவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது கூறப்படுகிறது.
2002ம் ஆண்டு தெற்கு கெய்ரோவில் நடந்த ரயில் விபத்தில் தான் அதிகபட்சமாக 350 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
Patrikai.com official YouTube Channel