டெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலை 100 நாட்கள் வரை நீடிக்கும் என்று எஸ்பிஐ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. முதல் அலைகளின் போது தினசரி புதிய வழக்குகளின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டால், ஏப்ரல் இரண்டாம் பாதியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது பரவும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) பொருளாதார ஆராய்ச்சித்துறை கொரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி,
இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா பரவல் பிப்ரவரி 15 முதல் 100 நாட்கள் வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும், கொரோனா பாதிப்பு மொத்த வழக்குகள் 25 லட்சத்தை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை பிப்ரவரி முதல் தொடங்கியுள்ளதாக தெரிவித்திருப்பதுடன், மீண்டும் அதிகரித்து வரும் பாதிப்பு, தினசரி புதிய வழக்குகள் காரணமாகமீண்டும் சோதனைகளை அதிகபடுத்தப்பட்டு வருவதாகவும், கொரோனாவின் முதல்அலைகளின் போது தினசரி புதிய நோயாளிகள் ஆரம்ப நிலை முதல் உச்ச நிலை வரையிலான நாட்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ஏப்ரல் இரண்டாம் பாதியில், கொரோனாவின் 2வது அலை இந்தியாவில் உச்சத்தை எட்டக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறந்தவர்களில் எண்ணிக்கை, இன்று அதிகமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 132 நாட்களில் தினசரி தொற்றுநோய்களின் அதிக பாதிப்பு என்பதை சுட்டிக்காட்டி இருப்பதுடன், இன்று 275 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருப்பது, கடந்த 83 நாட்களில் இதுவே அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது கொரோனா பரவி வருவது பெரும்பாலும் நகர்ப்புறமாக இருப்பதாகவும், 15 மாவட்டங்களில் புதிய வழக்குகள் அதிகரித்துள்ளன, இது வழக்குகள் இன்னும் அதிகரித்து வருகிறது என்பதை சமீப கால புதிய வழக்குகள் காட்டுகின்றன, அதுபோல முதல் 15 மாவட்டங்களில் இறப்பு விகிதமும் உயர்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வறிக்கை, “இருப்பினும், நல்ல விஷயம் என்னவென்றால், புதிய நிகழ்வுகளில் கிராமப்புற மாவட்டங்களின் தொற்று பரவலின் சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளது.
இந்தியாவுக்கு கிடைத்துள்ள உலகளாவிய கொரோனா அனுபவம் முதல் அலை விட இரண்டாவது அலையை எளிதாக எதிர்கொள்ளும் என்றும், தற்போது விரைவுபடுத்தப்பட்டு வரும் தடுப்பூசியால், இந்தியா நிலைமையை சிறப்பாக நிர்வகிக்க முடியும். இருந்தாலும், தடுப்பூசி வேகத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும் ஆலோசனை தெரிவித்து உள்ளது.
தற்போதைய நிலையில், ராஜஸ்தான், குஜராத், கேரளா, உத்தரகண்ட், ஹரியானா போன்ற சில மாநிலங்களில்தான் 60 வயதுக்கு மேற்பட்ட வயதான மக்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளன. இருப்பினும், பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் உட்பட அதிக வயதான மக்கள் தொகை கொண்ட பல மாநிலங்கள் தங்கள் வயதான மக்களில் குறைந்த சதவீதத்திற்கு தடுப்பூசி போட்டுள்ளன. இந்த மாநிலங்கள் தடுப்பூசி வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியா வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 5.31 கோடி கோவிட் -19 தடுப்பூசி அளவை வழங்கியுள்ளது.
ஒட்டுமொத்த சராசரியை விட மிசோரம், ராஜஸ்தான், குஜராத், திரிபுரா, சிக்கிம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று விகிதத்திற்கு அதிக ஊசி போடப்பட்ட நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா ஆகியவை தொற்று பரவலுடன் ஒப்பிடும்போது குறைந்த எண்ணிக்கையிலான மக்களை தடுப்பூசி போட்டுள்ளன, எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.