டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த  தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி என்வி ரமணா பெயரை தலைமை நீதிபதி  பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே 2019ம் ஆண்டு நவம்பர் 18ந்தேதி பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் ஏப்ரல்23ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இதன் காரணமாக, புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர், தாம் ஓய்வு பெறும் ஒரு மாதத்திற்கு முன்பு அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைப்பது வழக்கம். அதன்படி தற்போதைய தலைமைநீதிபதி,  உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவை பரிந்துரை  செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் மத்தியஅரசுக்கு அனுப்பியுள்ளார். இதை மத்தியஅரசு ஏற்று அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர் உதவி உயர்வு பெற்று கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். தற்போது மூத்த நீதிபதியாக உள்ள என்.வி. ரமணாவின் பதவிக்காலம் 2022ம் ஆண்டு ஆகஸ்டு 26ந்தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், அவரை அடுத்த தலைமைநீதிபதியாக தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.