டலூர்

ன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்ப முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில் வீராணம் ஏரியும் ஒன்றாகும்.   வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள லால் பேட்டையில் அமைந்துள்ளது.   இந்த நீர்த் தேக்கத்தில் இருந்து சென்னைக்கு விநாடிக்கும் 70 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது.

கடும் வெயில் காரணமாக தற்போது வீராணம் ஏரியின் நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளது.  எனவே தற்போது சென்னைக்கு திறந்து விடப்படும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது.   இந்த ஏரியில் இருந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 5 கன அடி நீர் மட்டுமே சென்னைக்கு திறந்து விடப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள், “வீராணம் ஏரியில் தற்போது கடும் வெயில் காரணமாக நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  இது மேலும் குறையும் அபாயம் உள்ளது.  இப்போது ஏரியில் உள்ள நீரின் அளவுபடி சென்னைக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே குடிநீர் அனுப்ப முடியும்” எனத் தெரிவித்துள்ளனர்.