பனாஜி: கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே இன்று காலமானார். அவருக்கு வயது 85.

கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே. நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந் நிலையில் ஹரிஷ் சாண்டே இன்று அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 85.
மறைந்த ஹரிஷ் சாண்டேவுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். அவர் 1980-90ம் ஆண்டுகளில் அமைச்சராகவும், 1990-95ம் ஆண்டுகளில் எம்பியாகவும் பதவி வகித்து உள்ளார். ஹரிஷ் சாண்டே மறைவுக்கு மத்திய அமைச்சர் ஆயுஷ் ஸ்ரீபாத் நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel