டில்லி
கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக அணிகளிடையே மும்முனை போட்டி நடைபெற உள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது
இந்த முதல் பட்டியலில் 86 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த தேர்தல் கேரள மாநிலத்தில் ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பாஜக வசம் உள்ள ஒரே தொகுதியான நேமம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கே முரளிதரன் போட்டியிட உள்ளார். இவர் கருணாகரனின் மகன் ஆவார்.
இந்த பட்டியலில் பல இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக 46 வேட்பாளர்கள் 25-50 வயதுக்குள் உள்ளவர்கள் ஆவார்கள்
இளைஞர் காங்கிரஸ் மற்றும் மகளிர் காங்கிரசைச் சேர்ந்தோருக்கு 55% தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாஜக பலமாக உள்ள தொகுதிகளில் காங்கிரஸின் பலம் பொருதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.