அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் திணறி வருகிறது. இன்னும் 52 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
ரிஷப் பன்ட் உடன் இணைசேர்ந்து அஸ்வின் நன்றாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 13 ரன்களுக்கே திருப்திப்பட்டுக் கொண்டார் அஸ்வின். இதனால், கடைசி நம்பிக்கையான வாஷிங்டன் சுந்தராவது பன்ட்டிற்கு துணை நிற்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல் இன்னிங்ஸில், குறைந்தபட்ச இங்கிலாந்தின் எண்ணிக்கையையாவது இந்தியா எட்டுவது அவசியம். தற்போது ஆடுகளத்தின் தன்மை மோசமாவதால், முதல் இன்னிங்ஸில் இந்தியா 30 ரன்கள் வரை பின்தங்கி, இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி கொஞ்சம் அடித்துஆடி, 250 ரன்கள் வரை இலக்கு நிர்ணயித்து விட்டால், இந்தியாவுக்கு பெரிய சிக்கலாகி, போட்டியையை தோற்கும் நிலை ஏற்படலாம். இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவும் பறிபோகலாம்!