
அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
கடைசி விக்கெட்டுக்கு, அந்த அணி 10 ரன்களுக்கு மேல் தாக்குப்பிடித்ததால், 200 ரன்களைத் தாண்டியது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 10 ரன்களை அடித்தார்.
அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார். டான் லாரன்ஸ் 46 ரன்களை அடித்தார்.
மொத்தம் 150 ரன்களைத் தாண்டுமா? என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், 205 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி.
இந்தியா சார்பில், அக்ஸாருக்கு 4 விக்கெட்டுகளும், அஸ்வினுக்கு 3 விக்கெட்டுகளும் கிடைத்தன. சுந்தருக்கு 1 விக்கெட். ஆகமொத்தம் சுழற்பந்து வீச்சுக்கு 8 விக்கெட்டுகள். முகமது சிராஜ் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Patrikai.com official YouTube Channel