அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதனால், அந்த அணி 200 ரன்களை எட்டுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களை அடித்தார். ஓலி போப் 29 ரன்களை எடுத்து அஸ்வினிடம் காலியானார். பேர்ஸ்டோ முன்னதாக 28 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் பென் போக்ஸ், வந்த வேகத்தில், 1 ரன் எடுத்த நிலையில், அஸ்வினிடம் காலியானார்.
அரைசதத்தை நெருங்கி ஆடிவந்த டான் லாரன்ஸ், 46 ரன்கள் எடுத்த நிலையில, அக்ஸார் படேலிடம் காலியானார். டாம் பெஸ் 3 ரன்களில் அக்ஸாரிடம் வீழ்ந்தார்.
இந்தியா சார்பில், அக்ஸார் 4 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், சுந்தர் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.