மேற்கித்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியினர், அங்கு வெஸ்ட் இன்டிஸ் வீரர்களுடன் நடந்த போட்டில், மேற்கு இந்திய வீரர்  பொல்லார்டு ஒரே ஓவரில் 6 சிக்சர் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே  சர்வதேச போட்டியில் இந்திய வீரர் யுவராஜ் சிங், ஹெர்செல் கிப்ஸுக்குப் பிறகு ஒரு ஓவரில் 6 சிக்சர்  எடுத்து பொல்லார்ட் 3 வது இடத்தைப் பிடித்தார். இந்த போட்டியில் இலங்கை படுதோல்வி அடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியினர்,  மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  விளையாடி வருகிறது. முதல்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், மேற்கிந்தியத் தீவுகள் டாஸ் வென்று பீல்டிங்கும் , இலங்கை அணி பேட்டிங்கும் தேர்வு செய்து களத்தில் இறங்கியது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் டிக்வெல்லா, தனுஷா குணதிலகா களத்தில் குதிதனர். ஆனால், வந்த வேகத்திலேயே குணதிலாக  4 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய   பதும் நிஷனாவுடன் டிக்வெல்லா பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தார்.  இந்த ஜோடி  30 ரன்களை கடந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, வந்த வீரர்களும் திறமையை நிரூபிக்க தவறியதால்,  இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்துக்குள் புகுந்தது. தொடக்க வீரர்களாக  இளம்வீரர்  சிம்மன்ஸ் (26), இவின் லிவிஸ் (28) அசால்ட்டாக ஆடி ரன்களை குவிக்கத் தொடங்கினர். ஆனால்,  இலங்கை  சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயாவில் பந்து வீச்சில்  விக்கெட்டுக்கள் பறிபோயின.  லிவிஸ், கிறிஸ் கெய்ல் (0), நிகோலஸ் பூரன் (0) அடுத்தடுத்து வெளியேறினர். தனஞ்சயா ஹாட்ரிக் விக்கெட்டு சாதனை படைத்தார்.

இதையடுத்து  கேப்டன் கெய்ரன் பொல்லார்ட் களமிறங்கினார். 6வது ஓவரில், அவருக்கு  ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இலங்கை சுழற்பந்துவீச்சாளர்  தனஞ்சயா வீசிய பந்து அடித்து துவம்சம் செய்தார்.  6ஆவது ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸர்களாக பறக்க விட்டு உலக சாதனை படைத்தார்.

இறுதியில் 13.1 ஓவரில் 134 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள்  வெற்றியைப் பெற்றது. ஆட்டநாயகன் விருதை பொல்லார்ட் தட்டிச்சென்றார்.

ஒரு போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்திருப்பது இதுவே முதல்முறையாகும். அதுவும் ஒரே பவுலருக்கு எதிராக இந்த சாதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓவர் ஆஃப் ஹாட்ரிக் வீரர் அகிலா தனஞ்சயாவில் ஆறு சிக்ஸர்களை அடித்த பிரையன் கெய்ரன் பொல்லார்ட்,  சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைக்கும் மூன்றாவது நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.
ஏற்கனவே சர்வதேச போட்டியில் இந்திய வீரர் யுவராஜ் சிங், ஹெர்செல் கிப்ஸுக்குப் பிறகு ஒரு ஓவரில் 6 ரன்கள் எடுத்து பொல்லார்ட் 3 வது இடத்தைப் பிடித்தார்.