
சோபியா: பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில், இந்தியாவின் தீபக் குமார், 72 கிகி பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பல்கேரியாவில், 72வது ஸ்டிரான்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடைபெற்றது. இதில், 72 கிகி எடைப்பிரிவில், பல்கேரியாவின் டேனியல் அசெனோவ் உடன், தங்கத்திற்காக, இறுதிப்போட்டியில் மோதினார் இந்தியாவின் தீபக் குமார்.
ஆனால், இப்போட்டியில் இவருக்கு தோல்வியே கிடைத்தது. இதனால், வெள்ளிப் பதக்கமே கைக்கு கிடைத்தது.
இத்தொடரில், இந்தியாவுக்கென்று இம்முறை 1 வெள்ளி & 1 வெண்கலம் என்று மொத்தம் 2 பதக்கங்கள் மட்டுமே கிடைத்தது. கடந்தமுறை 3 பதக்கங்கள் கிடைத்திருந்தன.
Patrikai.com official YouTube Channel