நைஜீரியா:
நைஜீரியாவின் ஒரு பள்ளியிலிருந்து சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் விடுக்கப்பட்டுள்ளதாக மாநில ஆளுநரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 17 ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் நைஜீரியாவில் உள்ள பள்ளியிலிருந்து அனைவரையும் தாக்கி 27 மாணவர்கள், 3 பள்ளி ஊழியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் 12 குடும்ப உறுப்பினர்கள் உட்பட 42 பேரை கடத்திச் சென்றனர்.

அவர்கள் அனைவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியா மாநில ஆளுநரின் செய்தி தொடர்பாளர் நோயல் பெர்ஜீ தெரிவித்துள்ளார். இதைப் பற்றி மேலும் விபரங்கள் பின்னர் வழங்கப்படும் எனவும் பெர்ஜீ தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel